அமைச்சர் பொன்முடி, அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். அதில், இந்த 2023-24 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பான நடவடிக்கைகள், அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பொது பாடத்திட்டம், கலைஞர் நூற்றாண்டு விழாவைக் கல்லூரியில் கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், அமைச்சர் பொன்முடி கடந்த சில தினங்களுக்கு முன் அமலாக்கத்துறை சோதனை முடிந்த கையோடு தற்போது அரசுப் பணிகளில் அவர் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -