இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் மாநிலங்களவை சபா நாயக்கரிடம் “மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி அவையில் விளக்கம் தர வேண்டும் என்று நேற்று பேசியதில், ‘மணிப்பூர், பிரதமர்’ என்ற வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கியுள்ளீர்கள். மணிப்பூர், பிரதமர் என்பது இங்கே பேசக் கூடாத வார்த்தைகளா?” எனக் காரசாரமாகக் கேள்வியெழுப்பினார்.
இதற்கு அவையில் பதில் வராததால்,இந்த மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அமளி செய்து வந்தனர். இதனால் அவை பிற்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கிய அவையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் தொடர்ந்து மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்கக்கோரித் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Advertisement -