கடந்த மே மாதம் மணிப்பூரில் 2 குக்கி பழங்குடியின பெண்களைச் சளியில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த காணொளி நேற்று முன்தினம் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதற்குப் பலரும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மணிப்பூரில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட பெண்களில், ஒருவரின் கணவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியது தற்போது தெரியவந்துள்ளது. அசாம் ரெஜிமெண்ட் பிரிவில் சுபேதாராக இருந்த அவர், ”நான் நாட்டை காப்பாற்றினேன். என் மனைவியையும், ஊரையும் காப்பாற்ற முடியவில்லை” என டிவி சேனல் ஒன்றுக்கு வேதனையுடன் பேட்டியளித்துள்ளார்
- Advertisement -