தமிழ் திரையுலகில் ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தில் முதலில் அறிமுகமானார் நடிகை ஜெனிலியா. இந்த படத்தின் மூலம் இவருக்குக் கோலிவுட்டில் பல ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில், தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு உட்படப் பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் அதிகளவு ப்ளாக்பஸ்டர் ஹிட்டை தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கொடுத்துள்ளார். தமிழில் குறிப்பாக பாய்ஸ், சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின், உத்தமபுத்திரன் போன்ற படங்களில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், தென்னிந்தியப் படங்களில் நடித்ததை குறித்து சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை ஜெனிலியா மனம் திறந்துள்ளார். அதில், அவர் “நான் தென்னிந்தியப் படங்களில் நடித்தபோது, என்னை பாலிவுட் கைவிட்டது. அங்கேயே செல் என்றனர். ஆனால் எனக்கு நடிப்பின்மீது காதல் வரக் காரணமே தென்னிந்திய சினிமா தான். எனக்குத் தென்னிந்திய சினிமாவை மிகவும் பிடிக்கும்” எனக் கூறியுள்ளார்.
- Advertisement -