திருமணமான பின்பு பிறந்த வீட்டுக்குப் போகிற பெண்கள் அங்கிருந்து கொண்டு வரக் கூடாத பொருட்கள் என்னென்ன தெரியுமா? நாம் பிறந்த வீட்டிலிருந்த தாய் சமைத்த அசைவ உணவுகளை ஆசையாகப் புகுந்த வீட்டிற்குக் கொண்டு வருவது வழக்கம். இப்படி அசைவ உணவுகளைப் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குக் கொண்டு வருவது கூடாது என்பது சாஸ்திரம்.
ஏனென்றால், அசைவ உணவைப் பின்தொடர்ந்து காத்து, கருப்பு போன்றவை வரும் என்பதால் இவ்வாறு கூறப்பட்டது. அப்படி நீங்கள் இவற்றைக் கொண்டு வர விரும்பினால் இவற்றுடன் இரும்பு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பொருள், கரித்துண்டு சிறிதளவு வேப்பிலை வைத்துக் கொண்டு வருவது நல்லது என்கின்றனர்.
- Advertisement -