ஐதராபாத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பஷீர்பாத் சந்திப்பு சிக்கனலில் சைரன் ஒலித்தபடி ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அப்போது, அங்கிருந்த போக்குவரத்து காவலர் இந்த ஆம்புலன்ஸ் செல்வதற்கு வாகனங்களை அப்புறப்படுத்தி வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
ஆனால், இந்த சிக்னலை தாண்டி 100 மீட்டர் தொலைவில் அந்த ஆம்புலன்ஸ் நின்றுள்ளது. இதனால், அந்த போக்குவரத்து காவலர் அந்த ஆம்புலன்சை சென்று பார்த்தபோது, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பஜ்ஜி சாப்பிட்டு இருந்துள்ளார். இதையடுத்து, அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு ரூ.1000 அபராத்தை விதித்துள்ளார். மேலும், இந்த அம்புலன்ஸின் மருத்துவமனை நிர்வாகம் மீது போலீஸ் வழக்கு போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -