இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் . அந்த வகையில், நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் வருகின்ற 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலங்களில் நடைபெற உள்ளதால் இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு கட்சியினர் பலவித விவாதங்களை முன்வைக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது
இந்நிலையில்,இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து ஆலோசிக்கப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சர்களின் அமைச்சரவை கூட்டம் இன்று (ஜூலை 12) டெல்லியில் நடைபெறுகிறது.
- Advertisement -