தீபாவளி பண்டிகையை ஒட்டி, வரும் நவம்பர் 9ம் தேதி சொந்த ஊர்களுக்குப் பயணிப்பதற்கான ரயில் முன்பதிவு, கவுன்டர்களில் காலை 8 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கி நடந்து வருகிறது. இதில், IRCTC இணையதளத்தில் 10 மணிக்கு தற்போது தொடங்கி உள்ளது. இந்நிலையில், நவம்பர் 10ம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 13 தேதி முதலும்,நவம்பர் 11ம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 14 முதலும், நவம்பர் 12ம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 15 முதலும் பயணிகள் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வரும் நவம்பர் 9ம் தேதிக்கான ரயில்களின் முன்பதிவு, கவுன்டர்களில் காலை 8 மணிக்குத் தொடங்கிய நிலையில், சென்னையிலிருந்து மதுரை செல்லும் பாண்டியன் மற்றும் திருநெல்வேலி செல்லும் நெல்லை விரைவு ரயில்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களின் படுக்கை வசதி டிக்கெட்டுகள் (Sleeper Class) 10 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், இங்குக் கூடுதல் ரயில் இயக்க மக்கள் கோரிக்கையும் வைத்துள்ளனர்.
- Advertisement -