புதுச்சேரியிலிருந்து திருப்பதி செல்லும் ரயிலில் பயணித்த அவர், சென்னை அடுத்துள்ள மதுராந்தகத்திற்கு ரயில் வந்த போது அதில் பயணித்த பயணி ஒருவர் இறங்கி தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் வந்த ரயில் கிளம்பியதால் அந்த பயணி ரயிலைப் பிடிக்க ஓடியுள்ளார்.
இந்நிலையில், அப்படி ஓடும் போது அந்த ரயிலின் கம்பியைப் பிடித்து ஏற முயன்றபோது எதிர்பாராதவிதமாக ரயிலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தவறி விழுந்து அந்த ரயிலில் சிக்கிப் பலியானார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Advertisement -