அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா கடந்த ஜூன் மாதம் அமைச்சரைக் கைது செய்ததைக் குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இன்று (ஜூலை 12) ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை 2வது நாளாக 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் தொடங்கியது.
அப்போது, அமலாக்கத்துறை தரப்பில், “புலன் விசாரணை அமலாக்கத்துறையின் கடமை. செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது கடமையை மறுப்பதாகும்” என வாதாடப்பட்டு வருகிறது.
- Advertisement -