அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது தவறு என அவரது மனைவி மேகலா தரப்பு நீதிமன்றத்தில் வாதாடியது. இதற்குப் பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா, “தவறாகக் கைது செய்தால் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படலாம். அதனால், ஆதாரமில்லாமல் அமலாக்கத்துறை கைது செய்யாது” என்றார்.
இந்நிலையில், தற்போது அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து, வழக்கு வரும் ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது எனச் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
- Advertisement -