நாடு முழுதும் பெய்யும் பருவமழை காரணமாக நாள்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக , தக்காளியின் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நியாய விலை கடைகளில் தக்காளியைக் குறைந்த விலையில் விற்றும், இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், தற்போது இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கக் கோரி ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயிலுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஒன்றிய அரசின் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும். பொருட்களைக் கூட்டுறவு விற்பனை நிலையம் மூலம் விற்பனை செய்தால் விலை குறையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -