மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக மதுரையில் பிரமாண்டமாகக் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழக அரசு சுமார் 134 கோடி நிதியை ஒதுக்கி இந்த நூலகத்தைக் கட்டியுள்ளது தமிழக அரசு . இந்த நூலகத்தை வரும் ஜூலை15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கவுள்ளார்
இந்நிலையில், இந்த கலைஞர் நூலகத்தைக் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “எதிர்கால தலைமுறை அறிவாற்றலை பெருக்கத் தென் தமிழ்நாட்டின் அறிவு திருக்கோயிலாக மதுரையில் திறக்கப்பட உள்ள கலைஞர் நூலகம் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு அறிவுச் செல்வத்தை வழங்கி தமிழர் வாழ்வை உயர்த்தும்” எனப் பெருமிதமாகக் கூறியுள்ளார்.
- Advertisement -