இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் தயாரான ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டது. அதிலும், குறிப்பாக இப்பாடலின் நடன அசைவுகள் பலரையும் ஈர்த்த உள்ளது. இந்நிலையில், இப்பாடல் இதுவரை 26 மில்லியன் மேல் பார்வையாளர்கள் பார்த்து உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் விமான நிலையம் வந்த நடிகை தமன்னா, ரசிகர் ஒருவரின் வேண்டுகோளிற்கு இணங்க அப்பாடலுக்கு நடனமாடினார். இதையடுத்து அந்த நபர் நடிகர் ரஜினி போலக் கண்ணாடி போட்டுக் காண்பித்து அசத்தினார். தற்போது இந்த காணொளி வைரலாகியுள்ளது.
- Advertisement -