மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக இரு சமூகத்தினர்க்கிடையே ஏற்பட்ட மோதலால் அம்மாநிலமே பயங்கர வன்முறை வெடித்தது. இதனால் 100க்கும் மேற்பட்டோர் இந்த வன்முறையால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இங்கு ராணுவப் படை ஒன்றிய அரசு அனுப்பியும் இந்த வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இந்நிலையில், இந்த மணிப்பூர் வன்முறை தொடர்பாக வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன் விசாரிக்கப்பட்டது. அப்போது, ” இந்த மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பது நீதிமன்றத்தின் வேலை அல்ல, அது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வேலை.அங்குள்ள பதற்றமான சூழலை அதிகரிக்க நீதிமன்றத்தை ஒரு தளமாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது” எனத் தலைமை நீதிபதி அமர்வு தனது கருத்தைத் தெரிவித்தார்
- Advertisement -