கொல்கத்தாவிலிருந்து செகந்திராபாத் சென்று கொண்டிருந்த ஃபலக்னுமா என்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டி, தெலங்கானாவின் பகிடிப்பள்ளி அருகே வந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், இதைத் தீப்பிடித்ததை அறிந்த லோகோ பைலட் உடனடியாக ஓடும் ரயிலை நிறுத்தி எச்சரித்ததால், பயணிகள் உயிர் தப்பினர். மேலும், இந்த விபத்து குறித்து அறிந்த காவலர்கள் தற்போது தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தனர்
- Advertisement -