கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் கூறி புகார் அளித்து அவரை கைது செய்யக்கோரித் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர், கடந்த மாதம் ஒன்றிய அமைச்சர் பிரிஜ் பூஷன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததையடுத்து இப்போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன், வினோத் தோமர் ஆகியோர் வரும் ஜூலை 18ம் தேதி ஆஜராகுமாறு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது
- Advertisement -