கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழக அரசு வரும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாள் முன்னிட்டு ரூ.1,000 உரிமைத்தொகை சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இதற்காகப் பல வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 7) அனைத்து மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இந்நிலையில், பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகளைச் சிறப்பு முகாம்களின் மூலம் தேர்வு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. பயனாளிகளிடம் இருந்து போதுமான ஆவணங்கள், தகவல்களை முகாம்களின்போதே திரட்ட உள்ளன. இந்த முகாம்களை அடுத்த வாரம் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த பணிகளை ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க உள்ளதாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
- Advertisement -