கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி அவர்கள் ‘மோடி’ என்ற பெயர் குறிப்பிட்டு கடும் விமர்சனம் செய்தார். இதனால், பாஜகவினர் ராகுல் காந்தி மீது போட்ட அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 7) இந்த மேல்முறையீடு மனு குறித்து விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், இந்த 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க மறுத்து, வழக்கைத் தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பளிப்பது. இதனால், தற்போது குஜராத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவதூறு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து மக்களவை செயலகத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -