கனமழை காரணமாகத் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாகவே தக்காளி விலை உச்சத்திலிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.40 குறைந்து, ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனால், இல்லத்தரசிகள் குறைந்துள்ள தக்காளியின் விலையால் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
அதேசமயம், கடலூர் செல்லாங்குப்பம் பகுதியில் இருக்கும் கடை ஒன்றில் வியாபாரி ஒருவர், தக்காளியைக் கிலோ ரூ.20க்கு விற்பனை செய்கிறார். இதனால், அந்தக் கடையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- Advertisement -