தமிழகத்தில் அரசு சார்பில் விற்கப்படும் ஆவினில் அதிரடியாகப் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் வாங்கு வாடிக்கையாளர்கள், ஆவின் மாதாந்திர பால் அட்டைகளைப் புதுப்பிக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, இந்த வாடிக்கையாளர்கள் குடும்ப அட்டை போன்ற ஆவணங்களின் நகலைக் கொடுத்தே பிறகே தங்களுடைய மாதாந்திர பால் அட்டையைப் புதுப்பிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது. அதைப்போல், ஒரு குடும்ப அட்டைக்குத் தினம் ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் மட்டுமே எனவும் குறிப்பிட்டுள்ளது
- Advertisement -