சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனாலிசா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். இதற்குப் பிறகு பல படங்களில் நடித்தாலும் பல ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது குஷி, ஸ்டார் போன்ற கிளாமர் ஹீரோயினாக நடித்த படங்கள்தான். பின்னர் ரோஜாகூட்டம், ராஜாதி ராஜா ஆகிய படங்களில் நடித்தார்.மார்க்கெட் இழந்த மும்தாஜ், சினிமா துறையை விட்டு முற்றிலுமாக விலகினார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக ரீ-என்ட்ரி கொடுக்கும் முயற்சியில் அவர் தோன்றினார், மேலும் அவர் தனது விளையாட்டை நன்றாக விளையாடினாலும், மிகவும் கண்டிப்பானவராக இருந்ததால் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறினார்.
அதனை தொடர்ந்து மலபார் போலிஸ், குஷி படத்தில் அனிதாவா நடித்து கட்டிப்பிடி கட்டிபிடிடா பாடலில் படுமோசமான கவர்ச்சி காட்டி நடித்திருப்பார். வெறும் கவர்ச்சியை கொண்டே இவர் நடித்ததால், முஸ்லிம் சமுகத்தில் இருந்து சில எதிர்ப்புகளும் வந்தது.
குத்து பாடல்களில் பட்டையை கிளப்பி நடித்து மும்தாஜுக்கு சரியான படவாய்ப்பில்லாமல் காணாமல் போனார். அதன்பின் பிக்பாஸ் 2 சீசனில் பங்கேற்று சுமார் 91 நாட்கள் வீட்டில் இருந்து வெளியேறினார்.
சுகாதாரத்தை பிக்பாஸ் வீட்டில் அமைத்துக்கொடுத்து நல்ல பெயரை வாங்கிய மும்தாஜின் மொத்த சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.
கிளாமர் பாடல், காட்சிகளில் மட்டுமே நடித்து சுமார் 22 கோடி அளவில் சொத்தினை சேர்த்து வைத்திருக்கிறார் நடிகை மும்தாஜ். தற்போது 43 வயதாகியும் இன்னும் திருமணமே செய்யாமல் தனிக்காட்டு கன்னியாக இருந்து வருகிறார்.’மோனிஷா என் மோனாலிசா’, ‘குஷி’ போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமான தமிழ் நடிகை மும்தாஜ், டிசம்பர் மாதம் மெக்கா புனித யாத்திரை சென்றிருந்தார். தனது பயணத்திற்குப் பிறகு ‘பிக் பாஸ் தமிழ்’ புகழ் நடிகை சென்னை திரும்பியுள்ளார்.