தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 7) 3வது நீதிபதி கார்த்திகேயன் விசாரணை தொடங்கியது. இதில் அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜி தரப்பில் என்.ஆர்.இளங்கோ வாதாடினர். அதில், அமைச்சர் சார்பில் “இரு நீதிபதிகளும் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது பற்றி விளக்கி இருக்கிறோம்” என்.ஆர்.இளங்கோ வாதாடியிருந்தார்.
பின்னர் அமலாக்கத்துறை சார்பில் வாதாடியதையும் கேட்ட 3வது நீதிபதி அவர்கள், ” மூன்றாவது நீதிபதி புதிய உத்தரவை வழங்க முடியாது. இரு நீதிபதிகள் வழங்கிய இரு வேறு தீர்ப்பில் எது சரி என்பதை மட்டுமே தீர்மானிக்க முடியும்” என்றார். பின்னர் அவர், ” அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு எதிரான வழக்கை வரும் ஜூலை 11, 12ம் தேதிகளில் விசாரணை நடைபெறும் கூறி ஒத்திவைத்துள்ளார்
- Advertisement -