கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடத்தை பிடித்தது. இதனால், இம்மாநிலத்தில் முதல்வராக சித்தராமையா , துணை முதல்வராக டி.கே.சிவகுமார் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், இன்று நிதியமைச்சராகத் தனது 14வது மாநில பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா. அதில், வரும் நிதியாண்டுக்கான மொத்த செலவினம் 3,27,747 கோடியாக இருக்கும் என மதிப்பீடு, வருவாய் செலவு 2,50,933 கோடி, மூலதனச் செலவு 54,374 கோடி மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் ரூ .22,441 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -