சென்னையில் உள்ள புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 2272 மில்லியன் கனஅடியாக உள்ளதால், சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாகத் தகவல் வந்துள்ளது. அதைப்போல், சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 188 மில்லியன் கனஅடியாக இருப்பதால், வினாடிக்கு 200கனஅடி நீர் வெளியேறுகிறது.
மேலும், இந்த கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 392 மில்லியன் கனஅடியாக உள்ளதால், வினாடிக்கு 15 கனஅடி நீர் சென்னை குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது
- Advertisement -