உங்கள் ராசிக்குச் சந்திராஷ்டமம் வந்தாலே பலருக்கும் பயமும் பதற்றமும் வந்துவிடும். சந்திராஷ்டமத்தின் பாதிப்புகள் நீங்க சில எளிமையான பரிகாரங்களைச் செய்தாலே பயமின்றி அந்த நாளினை கடந்து விடலாம் சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் + அஷ்டமம் = சந்திராஷ்டமம் ஆகும் .சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டே கால் நாட்களைத்தான் சந்திராஷ்டம காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக, நீங்கள் பிறந்த நட்சத்திரம் 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம நாளாகும்.
இந்த சந்திராஷ்டம நாளில் காலை எழுந்தவுடன் குளித்து முடித்து. சந்திரனை நினைத்து ”ஓம் ஸ்ரீ சந்திராய நமஹு ” என்ற மந்திரத்தை உச்சரித்துவிட்டு அதன் பின்பு அன்றாட வேலைகளைத் தொடங்கினால் சந்திராஷ்டமத்தால் உங்களுக்குப் பெரிய பிரச்சனைகள் எதுவும் வராது.
- Advertisement -