ராகுல் காந்தி அவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற பெயரைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார். இதனால் பாஜகவினர் இவர் மீது போடப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தி இதனை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இன்று (ஜூலை 7) மேல்முறையீடு மனுவைக் குறித்து குஜராத் உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, இந்த 2 ஆண்டு சிறைத் தண்டனைக்குத் தடை கோருவதற்கான காரணங்களை ஏற்க முடியாது என்றும், ராகுல் காந்தி மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன எனக் குஜராத் நீதிமன்றம் குறிப்பிட்டு இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
- Advertisement -