கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று (ஜூலை 7) காலை திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவை சரக டிஐஜி விஜயகுமார் IPS மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்” என்றார்
மேலும், அவர் ” விஜயகுமார் அவர்களது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும். அவரின் குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என ட்வீட் மூலம் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -