Sunday, December 3, 2023 1:18 pm

அண்ணாமலை வைத்து திருமண நிகழ்ச்சி : அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாஜக மாநில அண்ணாமலையின் 39வது பிறந்தநாளை ஒட்டி விழுப்புரத்தில் நேற்று 39 திருமண ஜோடிகளுக்குத் திருமண நிகழ்ச்சி நடத்தினார் அதிமுக நிர்வாகி முரளி. இதையடுத்து, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக நிர்வாகியைக் கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளி அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ” கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும். கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும். கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், சுழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு. S. முரளி (எ) ரகுராமன், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என அறிக்கை வெளியிட்டுள்ளார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்