வங்கதேச அணியின் அதிரடி வீரரான தமிம் இக்பால் இன்று (ஜூலை 6) செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பில் பேசிய அவர், ”தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக” அறிவித்தார். இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர் கடந்த 2007ல் வங்கதேச அணியில் அறிமுகமாகி, டெஸ்ட், 50 ஓவர் போட்டி மற்றும் டி20 என 3 ஃபார்மட்டிலும் விளையாடியுள்ளார்.
அதைப்போல், இவர் 70 டெஸ்ட்டில் விளையாடி 5,134 ரன்களும், 241 ஓடிஐயில் விளையாடி 8,313 ரன்களும், 78 டி20 போட்டிகளில் 1,758 ரன்களும் குவித்துள்ளார். இந்நிலையில், இன்று இவர் ஓய்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோதே, கண்ணீர் விட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -