மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் அங்கு வசித்த வந்த இரு சமூகத்தினர்க்கிடையே பெரும் மோதல் ஏற்பட்டதால், மணிப்பூர் மாநிலமே கிளர்ச்சியாளர்களால் வன்முறை வெடித்தது. இந்நிலையில், இந்த வன்முறையால் சுமார் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையைக் கட்டுக்குள் வைக்க ஒன்றிய அரசு ராணுவப் படையை அனுப்பியும் கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.
இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் பள்ளிக்கு வெளியே பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மாநிலத்தில் நீடிக்கும் தொடர் வன்முறைக்கு மத்தியிலும் நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளிக்கு முன் பெண் கொலை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்
- Advertisement -