பருவமழை காரணமாகத் தமிழகத்தில் ஏற்கனவே தக்காளியின் சதத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று மட்டும் கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ .130க்கு விற்பனையாகி வருகிறது.
அதைப்போல், தற்போது மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருகிறது. அதன்படி, கோயம்பேடு மொத்த சந்தையில் சாம்பார் வெங்காயம் ஒரே நாளில் ரூ. 50 அதிகரித்து ஒரு கிலோ ரூ150 ஆக விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் காய்கறி வாங்க வந்த மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் , ” பல மாநிலங்களில் மழையால் பெருமளவு விளைச்சல் பாதிக்கப்பட்டும் மற்றும் வரத்துக் குறைவால் நாடு முழுவதும் காய்கறிகளின் விலை தற்போது ஏற்றம் கண்டு வருகிறது” எனத் தெரிவித்தனர்.
- Advertisement -