தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் தனது மனைவியை ரகசியமாகப் புகைப்படம் எடுத்ததாக ஜெயச்சந்திரன் என்பவரைப் பிடித்த கணவர் போலீசில் ஒப்படைத்தார். அங்கு இதுகுறித்த நடத்திய விசாரணையில், அந்த நபரிடமிருந்த செல்போனை பிடுங்கி ஆய்வு செய்ததில், 500க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அவ்வாறு ரகசியமாக எடுத்திருந்தது தெரியவந்தது.
இதன் காரணமாக, அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த செல்போனில் அப்பகுதி வசிக்கும் பெண்கள் தண்ணீர் பிடிப்பது, சாலையில் நடக்கும் போது என அவர்களுக்குத் தெரியாமல் புகைப்படம் எடுத்துவந்துள்ளார்.
- Advertisement -