இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆனி மாதத்திற்குப் பல சிறப்புக்கள் உள்ளது. அதன்படி, இந்த ஆனி மாதம் தேவர்களின் மாலைப் பொழுதாகக் கருதப்படுகிறது. ஆனி மாதம் சிவன் விஷ்ணு இருவரையும் வழிபட ஏற்ற மாதமாகும். இந்த மாதத்தில் தான் மகா விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்துள்ளார்.
மேலும், இந்த ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று சிவன் கோவில்களில் நடராஜருக்கும் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறும். இதை ஆனித் திருமஞ்சனம் என்று அழைக்கிறோம். ஆனி கேட்டை நட்சத்திரத்தில் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் திருமஞ்சனம் நடைபெறும். இப்படி பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட ஆனி மாதம் 2023 ம் ஆண்டு ஜூன் 15 ம் தேதி துவங்கி வருகின்ற ஜூலை 16 ம் தேதி வரை உள்ளது.
- Advertisement -