நேற்று (ஜூலை 5) சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர ஆளுநர் ரவி அனுமதிக்க வேண்டும் எனக் கடிதம் ஒன்றை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிருந்தார். இந்நிலையில், இதற்குப் பதிலளிக்கும் விதமாக தற்போது ஆளுநர் மளிகை விளக்கமளித்துள்ளது.
அதில், “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் வழக்குகள் குறித்த ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் உள்ளது. அதைப்போல், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வழக்கில் விசாரணை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது” என ஆளுநர் பதிலளித்துள்ளார்.
- Advertisement -