தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி வட மாநிலங்களிலும் , கேரளாவிலும் அதிக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், கேரளா ஒட்டிய பகுதியான கோவை, நீலகிரியில் அடுத்த 3 நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யும் என’சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வால்பாறையில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 5) விடுமுறை அளித்து ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார். மேலும், வால்பாறையில் பெய்யும் கனமழை காரணமாகப் பேரிடர் மீட்புப் படையினர் அங்குத் தயார் நிலையில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், இந்த வால்பாறை பகுதியில் பெய்த கனமழை காரணமாகக் கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் கடந்த 24 மணி நேரத்தில் 14.7 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
- Advertisement -