மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாகவே இரு சமூகத்தினர்க்கிடையே பெரும் மோதல் வெடித்தது. இதன் காரணமாக மணிப்பூர் மாநிலமே கிளர்ச்சியாளர்களால் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை பல மக்கள் , உயிரிழந்தும், பொருள் இழந்தும், வீடுகள் இழந்தும் , வேற மாநிலத்திற்குப் புலப்பெயர்ந்தும் உள்ளனர். இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு ராணுவப் படையை அனுப்பியும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தவ்பால் மாவட்டத்தின் காங்கபோக் பகுதியில் இருக்கும் பாதுகாப்புப் படையினர் முகாமில் நுழைந்து, ஆயுதங்களைத் திருடும் முயற்சியில் அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டபோது, பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 27 வயது இளைஞர் உயிரிழந்தார். மேலும், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. பாதுகாப்பு வீரர் ஒருவரின் காலில் குண்டு பாய்ந்துள்ளது எனவும் அதிகாரிகள் தகவல் அளித்தனர்
- Advertisement -