தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் அவர்கள் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் ஜூலை 4 ஆம் தேதி முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, சென்னையில் நேற்று (ஜூலை 4) முதல் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது. இதை வாங்கிச் செல்ல மக்கள் கூட்டம் அலைமோதியதால், ஒரு மணி நேரத்தில் அனைத்து கடைகளிலும் தக்காளி விற்றுத் தீர்ந்து விட்டதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து பண்ணை பசுமை கடைகள் உட்பட 111 ரேஷன் கடைகளிலும் நேற்று ஒரே நாளில் 5,500 கிலோ தக்காளி விற்பனையாகியுள்ளது எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -