மத்தியப் பிரதேசத்தில் உள்ள மனநலம் சரியில்லாத பழங்குடியின நபர் மீது மது போதையில் சிறுநீர் கழித்துத் துன்புறுத்திய பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது IPC 294, 504 மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து, ” இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எனச் சாதி, மதம், கட்சி அடையாளங்கள் இல்லை; குற்றவாளி, குற்றவாளிதான்” எனவும் அவர் பேட்டியளித்துள்ளார்.
- Advertisement -