சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை 5) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் அக்கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதியில் மதுரையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்கான இலச்சினையை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார். பின்னர் அவர், “அதிமுக உடையவில்லை, சிந்தவில்லை, சிதறவில்லை” என பேட்டிளித்துள்ளார்
- Advertisement -