கடந்த ஜூன் 29 ஆம் தேதியன்று இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் வெளியானது. இப்படத்தில், வடிவேலு, பகத் பாசில் , கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. மேலும், இப்படத்தைப் பார்த்த பல பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ரஜினி காந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு, அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்” என ட்வீட் செய்து பாராட்டியுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள், “என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும் கர்ணனையும் பார்த்துப் பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் பிரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டினார் நமது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். என் இதயத்திலிருந்து நிரம்பி வழியும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என நெகிழ்ச்சியாக ட்வீட் செய்துள்ளார்
- Advertisement -