Thursday, February 29, 2024 1:49 am

குழந்தைகள் மகிழ்ச்சியாக சாப்பிட இதோ எளிய டிப்ஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -
இன்றைய நியூக்ளியர் குடும்பச்சூழலில், கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் பெரும்பாலும் தனித்தனியேதான் சாப்பிடுகின்றனர். இதனால்கூட, சாப்பாட்டு விஷயத்தில் குழந்தைகளுக்கு ஆர்வம் குறையலாம். எனவே, குறைந்தபட்சம் ஒருவேளை உணவாவது குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.ஒன்றரை முதல் இரண்டு வயதுவரை மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டிவிட வேண்டும். பிறகு அவர்களாகவே சாப்பிடப் பழக்கப்படுத்த வேண்டும். அப்போது குழந்தைகள் அடம்பிடித்தால் நான்கைந்து வாய் ஊட்டிவிடலாமே தவிர, முழுமையாக நாமே ஊட்டிவிடக் கூடாது. அப்போதுதான் குழந்தைகள் தங்கள் பசிக்குப் பிறரை எதிர்பார்க்காமல், தாங்களே சாப்பிடுவார்கள்.

ஆரோக்கியமான உணவு, பழங்கள் என எதுவானாலும் முதலில் அதைச் சாப்பிட்டுத் துப்பினாலோ அல்லது வாந்தி எடுத்தாலோ உடனே, ‘இது குழந்தைக்குப் பிடிக்காது/சேராது’ என்று நினைக்கக் கூடாது. அது அன்றையச் சூழல் மட்டுமே. அடுத்த நாள் பழத்தை ஜூஸ் அல்லது சாலட் என மாற்று வழிகளில் கொடுத்துச் சாப்பிடப் பழக்க வேண்டும்.பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் நேரம்தான் குழந்தைகளுக்கு அதிகமாகப் பசி இருக்கும். அப்போது பெரும்பாலான பெற்றோர்கள், காபி, டீ, பிஸ்கட், பிரெட் என்று கொடுப்பார்கள். இது தவறு. அப்போது சாதம், பொரியல் அல்லது டிபன் வகைகள் என ஹெவி உணவாகக் கொடுக்க வேண்டும். பிறகு சில மணி நேரம் கழித்து பால்/டீ/காபி கொடுக்கலாம்.

பெரியவர்கள் எதிர்பார்க்கும் அளவு சாப்பாட்டைக் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்குத் தேவையான அளவே சாப்பிடுவார்கள். ‘போதும் மம்மி” என்றால் விட்டுவிடலாம். மீண்டும் பசித்தால் தானாகவே வந்து சாப்பிடப் பழக்கவும். மாறாக, ‘முழுசா சாப்பிட்டுத்தான் ஆகணும்’ எனத் திட்டுவது, அடிப்பது, மற்றொரு குழந்தையுடன் ஒப்பிடுவது போன்ற செயல்களால், குழந்தைகளுக்குச் சாப்பாட்டின் மீது வெறுப்புதான் வரும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்