நடிகர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் 29 ஆம் தேதியன்று வெளியாகும் நிலையில் இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது, அவர் ” கடந்த 2011ல் வெளியான ‘7ஆம் அறிவு’ படத்தைப் பார்த்துவிட்டு, அதில் இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் வகையில் இருக்கும் வசனத்தை நீக்கச் சொல்லி, நடிகர் சூர்யா என்னிடம் கேட்டுக்கொண்டார். அப்போது எனக்குப் பெரிதாக அரசியல் புரிதல் இல்லாததால், இருக்கட்டும் என விட்டுவிட்டேன். என்னுடைய தயாரிப்பில் வெளியான இப்படத்தில், அப்படி ஒரு வசனம் இருந்திருக்கக் கூடாது என இப்போது நான் உணர்கிறேன்” என ஓபனாக கூறியுள்ளார்.
- Advertisement -