மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா இந்தாண்டு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த விழா முன்னிட்டு நாள்தோறும் பல நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் முதலியன மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வு சார்பில் இன்று (ஜூன் 24) தமிழகம் முழுவதும் சுமார் 100 இடங்களில் மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இது இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சிறப்பு மெகா மருத்துவ முகாம் நடைபெறும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
- Advertisement -