ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படும் யெவ்ஜெனி பிரிகோஜின் என்ற கோடீஸ்வரரால் நடத்தப்படும், வாக்னர் குழுவிலுடன் சேர்ந்த உக்ரைன் போரில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில், ரஷ்யா அதிபர் புதினுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த வாக்னர் ஆயுதக் குழு திடீரென அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராக மாறியுள்ளது. மேலும், இந்த வாக்னர் குழு ரஷ்ய நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ரஷ்யா ராணுவ அலுவலகத்தைக் கைப்பற்றியதால் அங்கு மேலும் பரபரப்பு நிலவி வருகிறது
இந்நிலையில், இதுகுறித்து ரஷ்யா அதிபர் புதின் “ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள், கிளர்ச்சியில் ஈட்டுபவர்கள் தேசத் துரோகிகள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, ராணுவத்திற்குத் தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன” என வாக்னர் குழுவைக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
- Advertisement -