நாள்தோறும் உணவுகளில் புதுவிதத்தைக் கொண்டுவருகிறோம் எனக் கூறி பலரும் பலவிதமான உணவுகளைக் கண்டுபிடிக்கின்றனர். அந்த வகையில், தற்போது வந்துள்ளது அவொகாடோ பானி பூரி. இதில் உருளைக்கிழங்குக்குப் பதிலாக அவொகாடோ, சால்மன் மீன், மீன் முட்டைகள் கொண்டு ஒரு பெண் புதுவித பாணி பூரியைத் தயாரித்துள்ளார்.
இதைக் கண்டு உறைந்து போன மக்கள், பானி பூரியின் மானமே போய்விட்டது என அப்பெண்ணை வாட்டி இணையதளத்தில் கிண்டலடிக்கும் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
- Advertisement -