தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதியதாகக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை மையம் சற்றுமுன் கணித்துள்ளது.
மேலும், இது வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடற்கரை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக இருப்பதால், இதன் காரணமாகக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- Advertisement -