இந்தாண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள், டி20 ஆகிய போட்டிகளில் விளையாடச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிற்கிறது. இதற்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் அணியில் புஜாரா இடம்பெறவில்லை குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அவர்கள், ” உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரஹானேவை தவிர எல்லா பேட்ஸ்மேன்களும் மோசமாக ஆடினார்கள். ஆனால், புஜாராவை பலிகடா ஆக்கியுள்ளது பிசிசிஐ” என்றார்.
மேலும், அவர் ” புஜாராவை நீக்கினால், அதுகுறித்து கேள்வி எழுப்ப சமூக வலைத்தளத்தில் பெரிய ரசிகர் பட்டாளம் அவருக்கு இல்லை என்ற காரணத்தினால்தான் புஜாரா நீக்கப்பட்டுள்ளார்” என காட்டமாகக் கூறியுள்ளார்
- Advertisement -