விண்வெளியில் அமைதியான, நிலையான ஒத்துழைப்பை வலியுறுத்தும் வகையில் அமெரிக்காவின் நாசா தலைமையிலான ‘ஆர்ட்டெமிஸ்’ ஒப்பந்தத்தில் தற்போது 27வது நாடாக இந்தியா இணைந்துள்ளது. இந்த ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை என்பது அமைதியான நோக்கங்களுக்காகச் சந்திரன், செவ்வாய், வால்மீன்கள் மற்றும் சிறுகோள்களின் சிவில் ஆய்வு மற்றும் பயன்பாட்டில் ஒத்துழைப்புக்கான கோட்பாடுகள் . இது அமெரிக்கா அரசுக்கும் மற்றும் பிற உலக அரசாங்களுக்கும் இடையே பிணைப்பு இல்லாத பலதரப்பு ஏற்பாடாகும்
இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்ததன் மூலம், வரும் 2025ம் ஆண்டுக்குள் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புதல், செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்தல் தொடர்பான தகவல்கள் அனைத்தும் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என நாசா தெரிவித்துள்ளது
- Advertisement -