பிரபாஸ் நடிப்பில் ராமாயணம் கதையை அடிப்படையாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவான ‘ஆதிபுருஷ்’ படம் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. இதில் ராமனாக பிரபாஸ், சீதையாக க்ரித்தி சனோன், ராவணனாக சைப் அலி கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படம் வெளியான 4 நாட்களில் ரூ.375 கோடி வசூல் செய்துள்ளதாக, அறிவித்திருந்த நிலையில், நேற்று(ஜூன் 23), உலகம் முழுவதும் வெறும் ரூ.3 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன் காரணமாக, தற்போது இப்படத்தின் வசூல் மிகவும் அடி வாங்கியுள்ளது. இது ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், அந்த பணத்தை எடுக்குமா? என்பதே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
- Advertisement -